கொழும்பில் சில இடங்களில் 36 மணி நேர நீர் வெட்டு

கொழும்பு, பெப்.18

கொழும்பின் சில இடங்களில் வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் 36 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

பிரதான குழாயில் ஏற்பட்ட திடீர் உடைப்பு காரணமாகவே இவ்வாறு நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

கொழும்பு 1, 7, 9, 10, 12 ஆகிய இடங்களில் நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது. அதேவேளை கொழும்பு 8 மற்றும் 11 ஆகிய பகுதிகளுக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply