தமிழ் ஊடகப்பரப்பில் ‘சமூகம் மீடியா’ காலடி எடுத்து வைத்து நான்கு வருடங்கள் கடந்துள்ள நிலையில் இறைவனின் ஆசியுடனும், அனைவரின் ஆதரவுடனும் இவ்வாண்டு புதிய அத்தியாயத்தில் காலடி எடுத்து வைக்கின்றோம் என தெரிவிப்பதில் பெரும் உவகை அடைகிறோம்.
மக்களின் குரலாக ஒரு YouTube தளத்தில் ஆரம்பித்த எமது ஊடகப்பயணம் தற்போது, உலகம் முழுவதும் samugaththin kural, Samugam media, Cine Samugam, Ariviththal Samugam Tv, Samugam News, Tech Samugam, Health Samugam, Motivation Samugam, Economy Samugam, Fun Samugam, Fun Tamil, samugammedia.com, cinesamugam.com, ariviththal.com என பலதரப்பட்ட தளங்களை மக்களின் விருப்பத்துக்கு ஏற்ப ஆரம்பித்துள்ளதுடன், ஐரோப்பா, கனடா, வட அமெரிக்கா ஆகிய நாடுகளில் தொலைக்காட்சி ஊடாகவும், எம் மக்களாகிய உங்களை மகிழ்வித்துப் பயணித்துக்கொண்டிருக்கிறோம்
இவை அனைத்தும், உங்களுடைய ஆதரவினாலும் ஆசிர்வாதத்தினாலும் மட்டுமே சாத்தியமாகியுள்ளது. அதில் ஒரு இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் புதிய இடத்தில் புதுப்பொலிவுடன் ‘சமூகம் மீடியா’ தனது பணியை தொடர்கின்றது.
எங்களுடைய வளர்சியில் எம்மோடு பயணித்த நல்லுள்ளங்களை எக்கணத்திலும் நாம் மறக்க மாட்டோம் என்பதை கூறிக்கொள்கின்றோம்.
எனவே உங்களுடைய ஆசீர்வாதமும் வாழ்த்துக்களும் எமது பயணத்துக்கு பலம் சேர்த்து மெருகூட்டும் என நம்புகிறோம்.



[embedded content]





