யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக முன்பள்ளி ஆசிரியர்கள் போராட்டம்!

<!–

யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக முன்பள்ளி ஆசிரியர்கள் போராட்டம்! – Athavan News

வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த முன்பள்ளி ஆசிரியர்கள்   யாழ்ப்பாண மாவட்ட செயலகம் முன்பாக இன்று (திங்கட்கிழமை) கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

தமக்கு வழங்கப்படும் 6 ஆயிரம் ரூபா கொடுப்பனவை அதிகரிக்க கோரியும், நிரந்தர நியமனம் வழங்கக் கோரியும், நீண்ட காலமாக தாம் குறைந்த சம்பளத்துடன் சேவையாற்றி வருவதாகவும் தமக்கு இந்த அரசாங்கம் உரிய தீர்வைப் பெற்றுத்தர வேண்டும் எனவும் கோரி இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வராசா கஜேந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் வருகை தந்து தமது ஆதரவினை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Leave a Reply