கெஹலியவுக்கு மீண்டும் சிக்கல்…! தயாராகும் நம்பிக்கையில்லா பிரேரணை…! samugammedia

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வல்லவுக்கு எதிராக மீண்டும் நம்பிக்கையில்லா பிரேரணையை சமர்ப்பிக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

மனித இம்யூனோகுளோபுலின் ஊழலின் மூளையாகத் தோன்றும் முன்னாள் சுகாதார அமைச்சருக்கு எதிராக ஐக்கிய மக்கள்  சக்தியால்  இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை மிக விரைவாக முன்வைக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, கெஹலிய ரம்புக்வல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் மக்கள் பிரதிநிதிகள் உண்மையிலேயே மக்களுக்காக நிற்கிறார்களா, அல்லது இரத்த மோசடிக்கு மூளையாக நிற்கிறார்களா என்பதை மக்கள் கண்டுகொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.

Leave a Reply