அனோஜனுக்காக வளத்தாப்பிட்டியில் ஒன்று கூடி மக்கள் பிரார்த்தனை!

அனோஜனின் விடுதலையை வலியுறுத்தி சம்மாந்துறை – வளத்தாப்பிட்டி மக்கள் தீபமேந்தி பிரார்த்தனையில் ஈடுபட்டதுடன், விடுதலைக்கான மகஜரிலும் கையொப்பமிட்டு வருகின்றனர்.

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனுக்கு மன்னிப்பு வழங்கி, அவரை விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரி, சம்மாந்துறை பிரதேசத்தின் வளத்தாப்பிட்டி பகுதியில் இன்று மக்கள் ஒன்றுகூடி பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

இதன்போது மக்கள் கைகளில் தீபங்களை ஏந்தி அனோஜனின் உயிரைக் காப்பாற்றவும், அவருக்கு மன்னிப்பு கிடைக்கவும் பிரார்த்தனை செய்ததுடன், அவரது விடுதலையை வலியுறுத்தும் மகஜருக்கான கையொப்பங்களையும் பதிவு செய்து வருகின்றனர்.

இதேவேளை, கல்முனை, நற்பிட்டிமுனை உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல்வாதிகள் ஒன்றிணைந்து அனோஜனுக்கு மன்னிப்பு வழங்கி அவரது உயிரைக் காப்பாற்றுமாறு கோரிக்கை விடுத்து பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Reply