சம்மாந்துறை வலயத்திலுள்ள சொறிக்கல்முனை திருச்சிலுவை மகா வித்தியாலயத்தில் இம்முறை தரம் 5புலமைப் பரிசையில் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் அதிக புள்ளிகளை எடுத்த நான்கு மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு , பாடசாலை அதிபர் அருட்சகோதரி டிலக்சி தலைமையில் பாடசாலையில் சிறப்பாக நடைபெற்றது.
வெட்டு புள்ளிக்கு மேல் எடுத்த
S.கிறிஸ்ரோன் ஆஜித்
Y.மெஷிரோன்
E. கர்ரியன்
கிறிஸ்ரியானோ
R.ஜெலினா கிறிஸ்ரின் ஆகிய மாணவர்களை
கெளரவித்து பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.
நாவிதன்வெளி பிரதேச சபை உப தவிசாளர் கே.புவனரூபன் தான் பதவியேற்ற காலம் முதல் தனது மாதாந்த கொடுப்பனவை பொதுமக்கள் கல்வி சமூக சேவைக்காக வழங்கி வருகிறார்.
அந்த வகையில் தனது 9வது மாத கொடுப்பனவை புலமைப் பரிசில் சாதனை மாணவர்களுக்கு வழங்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் சமூக சேவையாளரும் ஆசிரியருமான கண்ணதாசன் அவர்களும் வகுப்பாசிரியர் மாணவர்கள் பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.







