பொரளை சந்தியில் 4 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் விபத்து..!!

பொரளை சந்தியில் 4 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் விபத்தொன்று ஏற்பட்டுள்ளது. 

இந்த விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

அதிவேகமாக பயணித்த கார் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பேருந்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மேலும் இந்த விபத்தில் அவ்வழியாகச் சென்ற மற்றொரு வேனும், காரும் சேதமடைந்தன.

இந்த விபத்தில் யாருக்கும்  காயம்  ஏதும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply