
சென்னை, பெப்.22
சென்னை மாநகராட்சித் தேர்தலில் போட்டியிட்ட பிரபல பாடகர் கானா பாலா தோல்வி அடைந்தார்.
தமிழகம் முழுவதும் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சென்னை திருவிக நகர் 72 வது வார்டில் சுயேச்சையாக கானா பாலா போட்டியிட்டார்.
இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில், திமுக வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 6,095 வாக்குகள் பெற்ற கானா பாலா இரண்டாவது இடம் பிடித்தார்.
முன்னதாக, கடந்த 2006, 2011ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலிலும் இதே தொகுதியில் போட்டியிட்டு இரண்டாவது இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.