
மன்னார், பெப்.22
மன்னார் சதொச மனிதப் புதைகுழி வழக்கில், பாதிக்கப்பட்டோர் சார்பாக சட்டத்தரணிகள் முன்னிலையாவதற்கும், ஊடகங்கள் சம்பவ இடத்திற்கு சென்று செய்திகளை சேகரிப்பதற்கும் அனுமதி வழங்கி வவுனியா மேல்நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மன்னார், சதொச மனிதப்புதைகுழி விவகாரம் தொடர்பாக சிரேஷ்ட சட்டத்தரணி கே.எஸ்.ரட்ணவேலினால், வவுனியா மேல்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மீளாய்வு மனு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது, நீதிபதி குறித்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.