2வது அரையிறுதிப் போட்டிக்கு மேலதிக நாள் வழங்கப்படாது

2024 இருபதுக்கு20 உலகக்கிண்ண போட்டியில் அரையிறுதி போட்டி நடைபெறவுள்ள தினத்துக்கு மாற்று தினம் ஒன்று வழங்கப்பட மாட்டாது என சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ICC) தீர்மானித்துள்ளது.

போட்டியில் மழை குறுக்கிட்டால் 4 மணிநேரம் மட்டுமே கூடுதல் நேரம் வழக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டு டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி ஜூன் 2 ஆம் திகதி ஆரம்பமாவதுடன், இறுதிப் போட்டி ஜூன் 29 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

முதல் அரையிறுதிக்கு மேலதிக நாள் வழங்கப்பட்டாலும், இரண்டாவது அரையிறுதிக்கு மேலதிக நாள் வழங்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *