உக்ரைன் விவகாரம் : இந்தியாவின் நிலைப்பாட்டை வரவேற்கும் ரஷ்யா!

உக்ரைன் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு ரஷ்யா வரவேற்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து டெல்லியில் உள்ள ரஷ்ய தூதர் ரோமன் பாபுஷ்கின் தெரிவிக்கையில், ‘சர்வதேச அளவில் பொறுப்பு மிக்க நாடாக இந்தியா முக்கிய பங்காற்றி வருகிறது.

உலக விவகாரங்களில் சுதந்திரமான, நடுநிலையான அணுகுமுறையை இந்தியா கொண்டுள்ளது.  இந்தியாவும், ரஷ்யா ராணுவம், பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் கொண்டிருக்கும் நட்புறவை உக்ரைன் விவகாரம் பாதிக்காது.

குஜராத்தில் அடுத்த மாதம் நடைபெறும் இராணுவ கண்காட்சியல் ரஷ்யாவின் பங்களிப்பு அதிகமாக இருக்கும்.  உக்ரைன் பிரச்சினையில் இந்தியாவின் சுதந்திரமான அணுகுமுறை வரவேற்கத்தக்கது’ எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply