
உக்ரைன் மீதான படையெடுப்பின் காரணமாக ரஷ்யாவில் திரைப்படங்களை வெளியிடுவதை நிறுத்துவதற்கு டிஸ்னி, வோர்னர் பிரதர்ஸ் முடிவு செய்துள்ளனர்.
இரு பெரிய ஹொலிவுட் ஸ்டுடியோக்களான டிஸ்னி, வோர்னர் பிரதர்ஸ் இந்த தீர்மானத்தை எடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் மீதான படையெடுப்பு, அதிகரித்து வரும் மனிதாபிமானமற்ற நெருக்கடிக்கு பதிலளிக்கும் வகையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் ரஷ்யாவில் வரவிருக்கும் புதிய திரைப்படங்களுக்கு இந்த தடை பயனுள்ளதாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து, இந்த வாரம் ரஷ்யாவில் ‘The Batman’ திரைப்படத்தை வெளியிடுவதை நிறுத்துவதாக WarnerMedia அறிவித்துள்ளது.





