உலக கிண்ண உதைபந்தாட்ட போட்டியிலிருந்து நீக்கப்பட்ட ரஷ்யா

உலக கிண்ண உதைப்பந்தாட்ட விளையாட்டில் இருந்தும் ரஷ்யா நீக்கப்பட்டுள்ளது. உலகக்கிண்ண தகுதிச் சுற்றுப் போட்டிகளில் ரஷ்ய அணியுடன் போலந்து, ஸ்வீடன் போன்ற அணிகள் விளையாட மறுத்ததுடன் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற அணிகளும் ரஷ்யாவை நீங்குமாறும் தொடர்ந்து கொடுத்து வந்த அழுத்தம் காரணமாக உதைப்பந்தாட்ட நிறைவேற்றுக் குழு இந்த முடிவினை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ரஷ்யாவின் நீக்கமானது அல்லது வெளியேற்றப்பட்டமையானது காலவரையற்றதுடன், இந்த தடையுத்தரவானது எதுவரைக்கும் செல்லுபடியாகும் என்பதைக் குறித்து எந்த அறிவிப்புக்களும் வெளியிடப்படவில்லை.
எனவே எதிர்வரும் உலக கிண்ண உதைப்பந்தாட்ட போட்டிகள் ரஷ்ய அணி இல்லாத போட்டிகளாகவே நடைபெறவுள்ளமை குறிப்பித்தக்கது.

Leave a Reply