
இலங்கையை உலக சுற்றுலாத் தளமாக மேம்படுத்தும் நோக்கில் தான் செயற்பட்டு வருவதாக ஐக்கிய இராச்சியத்தின் மிஸ் எவாஞ்சலின் எல்ச்மனர் தெரிவித்தார்.
இலங்கை வந்துள்ள அவர் நேற்றுமுன்தினம் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.
இலங்கை சுற்றுலா பணியகத்தினால் இலங்கைக்கான அவரது விஜயத்தை நிறைவு செய்யும் வகையில் இந்த ஊடகவியலாளர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இது நிச்சயமாக பாதுகாப்பான மற்றும் அழகான நாடு, இந்த நாட்டில் உள்ள சுற்றுலாப் பயணிகளுக்கு நிறைய அனுபவங்களை வழங்குகிறது.
காலி, எல்ல, நுவரெலியா, கண்டி, சிகிரியா, பின்னவல உள்ளிட்ட பல இடங்களுக்குச் சென்றேன்.
ஹிரிவடுன்ன கிராமத்திற்கு எனது விஜயத்தின் போது இலங்கையின் கிராமிய வாழ்க்கையை என்னால் அனுபவிக்க முடிந்தது. இந்த ஒவ்வொரு இடத்திலும் ஒரு மறக்க முடியாத அனுபவம். இலங்கையில் எனது அனுபவம் ஆச்சரியமாக இருக்கிறது எனத் தெரிவித்தார்.





