
கொழும்பு, பெப் 3: விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் அமைச்சு பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உதய கம்மன்பில வகித்து வந்த மின்சக்தி அமைச்சு பொறுப்புக்கு காமினி லொகுகே நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த தகவலை காமினி லொகுகே உறுதிப்படுத்தியுள்ளார். எரிசக்தி அமைச்சராக பதவி வகித்த காமினி லொகுகேவிற்கு பதிலாக அப்பதவியில், போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாச்சி நியமிக்கப்பட்டுள்ளார்.
எஸ்.பி. திஸாநாயக்கவுக்கு கல்வி அமைச்சர் பதவியும், திலும் அமுனுகமவுக்கு போக்குவரத்து அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது.
விமல் வீரவன்ச வகித்து வந்த கைத்தொழில் அமைச்சர் பதவி, கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் உதய கம்மன்பில மற்றும் விமல் வீரவன்ச ஆகியோரின் அமைச்சுப் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
விமல் வீரவன்சவும், உதய கம்மன்பிலவும் அண்மைக்காலமாக அரசை விமர்சித்து வந்தது குறிப்பிடத்தக்கது.





