அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கியமைக்கு நன்றி தெரிவித்தார் விமல் வீரவன்ச! – Athavan News
தன்னை அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கியமைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச நன்றி தெரிவித்துள்ளார்.
அமைச்சுப் பதவிலிருந்து நீக்கப்பட்டமை தொடர்பிலான கடிதம் விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பிலவிற்கு ஜனாதிபதி செயலகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் குறித்த கடிதத்தை படமெடுத்து தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ள விமல் வீரவன்ச, “நன்றி”என பதிவிட்டுள்ளார்.