கம்மன்பில, விமல் அமைச்சுப் பதவி பறிப்பு: மஹிந்தவிற்கு உடன்பாடு இல்லையாம்!

அமைச்சர்களை, அமைச்சுப் பதவிகளில் இருந்து நீக்குவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தில் தனக்கு உடன்பாடு இல்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கூறினார்.

இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,

பதவி நீக்கம் செய்யப்பட்டதன் பின்னர் தன்னையும் பாராளுமன்ற உறுப்பினர் கம்மன்பிலவையும் பிரதமர் தொலைபேசி ஊடாக தொடர்புகொண்டு பேசியதாகத் தெரிவித்தார்.

அமைச்சுப் பதவிகளில் இருந்து எங்களை நீக்கும் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் தீர்மானத்துடன் தான் உடன்படவில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply