
தம்புள்ளை, மார்ச் 6
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு அருகில் உள்ள மொத்த விற்பனை நிலையமொன்றில் இன்று காலை தீ பரவல் ஏற்பட்டுள்ளது.
தீப்பரவலை கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். தம்புள்ளை மாநகர சபையின் இரண்டு தீயணைப்பு வாகனங்கள், சீகிரிய விமானப்படை முகாமின் தீயணைப்பு வாகனம் ஒன்றும் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.





