சேருவில காட்டுப்பகுதியில் சந்தேக நபர்களை சுற்றிவளைத்த பொலிஸார்

சேருவில காட்டுப்பகுதியில் மான் இறைச்சியை வைத்திருந்ததாக ஐந்து சந்தேக நபர்களை சேருநுவர பொலிஸார் கைது நேற்று (7) கைது செய்துள்ளார்.

இதையடுத்து, மூதூர் நீதிவான் நீதி மன்றில் ஆஜர்படுத்தியதை அடுத்து குறித்த சந்தேக நபர்கள் குற்றவாளிகளென நீதவான் கருதி முதலாம் சந்தேக நபருக்கு முப்பதாயிரம் ரூபாயும் ஏனைய நான்கு சந்தேக நபர்களுக்கும் தலா இருபத்தையாயிரம் ரூபா தண்டப்பணம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

முதலாம் சந்தேக நபர் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கட்டுத்துவக்கு வைத்திருந்த நிலையில் கைது செய்ததாக பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a Reply