பதவியிலிருந்து நீக்கிய எம்.பிகளின் கதிரைகளை பறித்த கோட்டா அரசு!

அமைச்சர்களான விமல் வீரவங்ச மற்றும் அமைச்சர் உதய கம்மன்பில ஆகியோர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதை அடுத்து, இன்றைய சபை அமர்வில், நாடாளுமன்ற இருக்கைகளில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

விமல் வீரவன்சவுக்கு 73ஆவது பின்வரிசை ஆசனமும், உதய கம்மன்பிலவுக்கு 78 ஆவது பின்வரிசை ஆசனமும் இன்றைய தினம் வழங்கப்பட்டுள்ளது.

புதிதாக பதவியேற்ற கைத்தொழில் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்கவுக்கு முன் வரிசையில் இரண்டாவது ஆசனமும், போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகமவிற்கு ஆளுங்கட்சியின் 30ஆவது ஆசனம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் அண்மையில் மீண்டும் இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்ட அருந்திக பெர்னாண்டோவுக்கு 36ஆவது ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply