
காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடி அலையும் உறவுகளின் கண்ணீருக்கு விடை எங்கே என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் கேள்விஎழுப்பியுள்ளார்.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது கருத்து தெரிவித்த அவர்,
சர்வதேச மகளிர் தினத்தில் கூட நீதி கிடைக்காமல் உறவுகள் கண்ணீருடன் போராடிவருகின்றனர்.
சுமார் 90 ஆயிரம் விதவைகள் வடக்கு கிழக்கில் இருப்பதாகவும் இவர்களின் கண்ணீருக்கு சர்வதேசம் பதில் வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.





