
இன்று இடம்பெற்ற சபை அமர்வில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரோகினி குமாரி விஜேரத்னா
கருத்து தெரிவிக்கையில்:
நாட்டில் மக்கள் பட்டினியால் சாக போகிறார்கள். வரிசை யுகம் வந்து விட்டது. ஆனால் மாட்டுக் கூட்டத்தை வைத்துக்கொண்டு இந்த ஜனாபதி படும் பாடு சொல்ல தேவையில்லை.
மாடுகளை அவிழ்த்து விட்டு வேடிக்கை பார்க்கிறார். அவை போராட்டம் என்ற பெயரில் ஏதோ செய்கிறது. முதலில் மக்களை பற்றி சிந்திக்க வேண்டும். உங்கள் கொடூர ஆட்சிக்கு எதிராக பெண்களை திரட்டி போராடுவோம்.
ஏலும் என்றால் தடுத்து நிறுத்திப் பாருங்கள். பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியாத நீங்கள், உங்கள் மாட்டுக் கூட்டத்தை அவிழ்த்து விடுங்கள் பார்ப்போம்.- என்றார்.





