
கிளிநொச்சி – பூநகரி – கௌதாரிமுனைப் பகுதியில் உள்ள மக்கள் குடியிருப்புக்குள் இரு காட்டு யானைகள் உட்புகுந்தமையினால் பெரும் பரபரப்பு நிலவுகின்றது.
முட்கொம்பம் காட்டுப்பகுதியில் நடமாடிய யானைகள் உணவிற்காக இவ்வாறு பாதை மாறி வந்திருக்ககூடும் என அப்பகுதி மக்கள் தெரிவிப்பதோடு, விபரம் தெரிந்த காலத்தில் இதுவரை கௌதாரிமுனைக்கு யானைகளே வந்தது கிடையாது எனவும் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் மாவட்ட வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு தகவல் வழங்கப்பட்டதயடுத்து, திணைக்கள அதிகாரிகள் அப்பகுதிக்குச் சென்று நிலமையை அவதானித்து யானையை வனப்பகுதிக்கு விரட்ட நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.





