திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பயணிகள் பஸ்ஸில் லொறியொன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்து இன்று காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தையே, கந்தளாய் பிரதேச சபைக்குச் சொந்தமான லொறியொன்றே இவ்வாறு பின்னால் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் பயணிகள் யாருக்கும் காயங்கள் ஏற்படாத போதிலும், லொறியின் சாரதிக்கு வாய் உடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
லொறியின் சாரதி நித்திரை தூக்கத்தில் சென்று மோதியுள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பயணிகளுக்கு பிறிதொரு பஸ் ஏற்பாடு செய்யப்பட்டு அனுப்பப்பட்டதாகவும், விபத்துச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.







