யாழ்ப்பாணம் குருநகர் இறங்குதுறையில் சுற்றுலா படகு சேவை அங்குரார்ப்பன நிகழ்வு இன்று காலை இடம்பெற்றுள்ளது.
கடல் தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் அரச அதிகாரிகள், பொது மக்கள் கலந்து கொண்டுள்ளனர்.
குறித்த சுற்றுலா படகு சேவை சுமார் 2 கோடி ரூபாய் செலவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உள்ளூர் சுற்றுலா துறையை அபிவிருத்தி செய்ய முடியும் என தெரிவிக்கப்படுகிறது.







