பொலிஸ் நிலையத்தில் தஞ்சமடைந்த ஆந்தை!

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் சுகயீனமுற்று பறக்க முடியாத நிலையில் காணப்பட்ட ஆந்தையை அவதானித்து பொலிஸார் அவ் ஆந்தையை வனஜீவராசிகள் திணைக்களத்தினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் நேற்றிரவு பறக்க முடியாத நிலையில் ஆந்தை குஞ்சு காணப்பட்டுள்ளது.

குறித்த ஆந்தை குஞ்சை பொலிஸார் வனஜீவராசிகள் திணைக்களத்தினரிடம் ஒப்படைத்த நிலையில், அவர்கள் அதனை மருத்துவச் சிகிச்சைக்காக வனஜீவராசிகள் திணைக்கள கால்நடை வைத்திய நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

Leave a Reply