“தேர்தல் உறுதிமொழிக்கு அமைய நாடு முழுவதும் தேசிய பாடசாலைகள் அமைக்கப்படும்”

நாடு முழுவதும் தேசிய பாடசாலைகளை நிறுவுதல் என்ற அரசாங்கத்தின் தேர்தல் வாக்குறுதி தற்போது நிறைவேறிவருவதாக கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், ஒவ்வொரு பிரதேச செயலகத்திலும் தேசிய பாடசாலை ஒன்றை நிறுவுவதற்கு முன்னுரிமை அளிக்க ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக கூறினார்.

மாகாண சபைகளுக்கு உட்பட்ட பாடசாலைகளை மத்திய அரசால் கையகப்படுத்த முடியாது என அமைச்சர் தினேஷ் குணவர்தன கூறினார்.

அத்தோடு இந்த விடயம் தொடர்பாக மாகாண சபைகளுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

Leave a Reply