
எரிவாயு தட்டுப்பாடு காரணமாக மீண்டும் நாட்டில் பல இடங்களில் நீண்ட வரிசைகள் உருவாகியுள்ளன.
இந்நிலையில் எரிவாயு பற்றாக்குறையால் நாடு முழுவதும் ஏராளமான உணவகங்கள் மூடப்பட்டுள்ளன.
தேவையான எரிவாயு கையிருப்பு தற்போது இறக்கப்பட்டு, விநியோகிக்கப்படும் என லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், நாட்டின் எரிவாயு விநியோகத்தை அடுத்த சில நாட்களில் மீட்டெடுக்க முடியும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிக்கையொன்றில் அறிவித்துள்ளது.





