
அரச மருத்துவமனைகள் 60 அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ண தெரிவித்துள்ளார்.
அரச ஒசுசல மற்றும் தனியார் பாமசிகளில் அதிக மருந்து தட்டுப்பாடு காணப்படுகிறது.
உண்மையில் இது ஒரு கவலையான விடயம் குறிப்பாக, புற்றுநோயிற்கான மருந்துகள் தற்போது அதிகளவில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. புற்றுநோயிற்கான மருந்துகள் இல்லாவிடின் நோயின் வளர்ச்சி அதிகரிக்கும்.
அரச வைத்தியசாலையில் மருந்து தட்டுப்பாடு காரணமாக, தனியார் துறையில் குறித்த மருந்துகளின் விலை அதிகமாக காணப்படுகிறது. எனவே சாதாரண மக்கள் பாரிய இன்னல்களுக்கு முகம் கொடுக்கின்றனர்.
அதேபோல பாம்பு தீண்டினால் அதற்கான மருந்துகள் இல்லை, இருதய அறுவை சிகிச்சை பின் வழங்கப்படும் மருந்துகள் இல்லை. மற்றும் தலசீமியா நோய்ளுக்கான மருந்துகள் இல்லை. மற்றும் வலி நிவாரணி குறிப்பாக பெனடோல் போன்றவை தற்போது இல்லை.
ஒளடதங்கள் கப்பலில் வந்தாலும், அவற்றை பெற நாட்டில் டொலர்கள் இல்லை. வரலாற்றில் முதன் முறையாக இவ்வாறான தட்டுப்பாடு காணப்படுகிறது.
உணவு எவ்வளவு அத்தியாவசியமோ அதேபோல ஒளடதங்கள் மிக அவசியம். எனவே உடனடியாக இதற்கான தீர்வு எடுங்கள்.- என்றார்.





