பெந்தோட்டை கடலில் மர்மாக உயிரிழந்த ரஷ்ய பிரஜை

பெந்தோட்டையில் கடலில் மூழ்கி ரஷ்ய பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பெந்தோட்டை பரடைஸ் தீவில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் இரண்டு வார விடுமுறைக்காக ரஷ்யாவிலிருந்து இலங்கை திரும்பிய ரஷ்ய பிரஜை ஒருவர் ஹோட்டலுக்கு முன்னால் உள்ள கடலில் நீராடச் சென்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பெந்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (09) பிற்பகல் பெந்தோட்டையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் மனைவியுடன் தங்கியிருந்த வெளிநாட்டவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்தவர், 46 வயதுடைய வான்கோவ் அயுர்ல் என்ற ரஷ்ய பிரஜை என்பது தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் மீதான பிரேதப் பரிசோதனை இன்று (10) நடைபெறவுள்ளது.

இதேவேளை, அவரது சடலம் அளுத்கம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply