‘குபேரா’ திரைப் படத்தின் ஓ.டி.டி உரிமையை பெற்ற பிரபல நிறுவனம்

தனுஷ், ராஷ்மிகா நடித்துள்ள ‘குபேரா’ திரைப் படம்  எதிர்வரும் ஜூன் மாதம் 20-ஆம் திகதி   திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தனுஷ், ‘ராயன்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து ‘இட்லி கடை’ படத்தை இயக்கி நடித்து வருகிறார். இப்படம் அக்டோபர் 1-ம் திகதி வெளியாகிறது. மேலும் சேகர் கம்முலா இயக்கத்தில் ‘குபேரா’ படத்திலும் நடித்து வருகிறார்.

ஸ்ரீவெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரிக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வருகிற ஜுன் மாதம் 20-ம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்தப் படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, தெலுங்கு முன்னணி நடிகர் நாகார்ஜுனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். இந்த படத்தின் தமிழ்நாட்டு திரையரங்க வெளியீட்டு உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.

இதற்கிடையில், பான் இந்தியா அளவில் உருவாகியுள்ள ‘குபேரா’ படத்தின் ஓ.டி.டி உரிமையை கைப்பற்ற பல நிறுவனங்கள் போட்டிப்போட்டு கொண்டன. இறுதியில் பிரபல நிறுவனமான அமேசான் பிரைம் 50 கோடி  இந்திய ரூபாய்  கொடுத்து குபேரா படத்தின் ஓ.டி.டி உரிமையை கைப்பற்றியுள்ளதாகத்  தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *