முச்சக்கரவண்டி கட்டணத்தை அதிகரிப்பதே நியாயமானது! சாரதிகள் கோரிக்கை

நாட்டின் தற்போதைய நிலைமையைக் கருத்திற்க் கொண்டு முதல் கிலோமீட்டருக்கான கட்டணத்தை 80 ரூபாவாகவும், ஏனைய ஒவ்வொரு கிலோமீட்டருக்குமான கட்டணத்தை 50 ரூபாவாக அதிகரிப்பது நியாயமானது என அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டதன் பின்னர் விலை அதிகரிப்பு அவசியமானது என தொழிற்சங்கத்தின் தலைவரான லலித் தர்மசேகர தெரிவித்துள்ளார்.

போக்குவரத்துத் துறையில் நியாயமான விலையை நிர்ணயிக்கும் மற்றும் அங்கீகரிக்கும் ஒரு அமைப்பை அரசாங்கம் நிறுவ வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

2013 ஆம் ஆண்டு அமைச்சரவைப் பத்திரத்தின் மூலம் விலை மதிப்பீட்டுக் குழுவொன்று முன்மொழியப்பட்டதாகவும், பின்னர் 2018 ஆம் ஆண்டு செல்வாக்கு காரணமாக அது அகற்றப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

எரிபொருள் விலையேற்றத்தை பிரதிபலிக்கும் வகையில் போக்குவரத்துத் துறையில் விலையை அதிகரிக்குமாறு சாரதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply