புற்றுநோயியல் நிபுணர்கள் அமைப்பின் புதிய தலைவர் தொிவு!

இலங்கை புற்று நோயியல் நிபுணர்கள் அமைப்பின் புதிய தலைவராக புற்றுநோயியல் மருத்துவ நிபுணர் மருத்துவ கலாநிதி நடராஜா ஜெயக்குமார் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.காரைநகரைப் பிறப்பிடமாகக் கொண்டவர், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில்கல்விகற்றவர். தெல்லிப்பழை புற்றுநோய் மருத்துவமனை அமைவதற்கு பல பரிமாணங்களில் முயற்சித்தவர். புற்று நோயால் பாதிக்கப்பட்ட நோயாளர்களை உடல் உள ரீதியாக ஆறுதல் படுத்துவது, சிகிச்சை வழங்குவது போன்றவற்றில் தனக்கென தனித்துவமான அணுகுமுறையை கொண்டவர்.
சட்டத் துறையிலும் பட்டப் படிப்பை நிறைவு செய்து ஓர் சட்டவாளராகவும் தன்னை நிலை நிறுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply