ஈச்சமோட்டையில் கைக்குண்டு மீட்பு!

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொழும்புத்துறை ஈச்சமோட்டைப் பகுதியில் வெடிக்காத நிலையில் கைக்குண்டு நேற்று பொலிஸ் விசேட அதிரடிப்படையால் மீட்கப்பட்டது.

குறித்த பகுதியில் வீதியின் அருகே குழாய் நீர் பொருத்தும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஊழியர்கள் குழி வெட்டிய போது சந்தேகத்துக்கிடமான பொருள் இருப்பதை அவதானித்தனர்.

இது தொடர்பில் யாழ்ப்பாணப் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து குறித்த இடத்துக்கு விரைந்த பொலிஸார் சந்தேகத்துக்கிடமாகக் காணப்பட்ட பொருளை அவதானித்து கைக்குண்டு என்பதை உறுதி செய்ததுடன் விசேட அதிரடிப்படையினரை வரவழைத்து கைக்குண்டை மீட்டனர்

Leave a Reply