இலங்கை வீரருக்கு சிறந்த கள மெய்வல்லுநர் விருது!

உயரம் பாய்தலில் இலங்கை தேசிய சொந்தக்காரராக திகழும் உஷான் திவங்க , அமெரிக்காவில் நடைபெற்ற லோன் ஸ்டார் கொன்பெரன்ஸ் விருது விழாவில் சிறந்த கள மெய்வல்லுநர் வீரருக்குரிய விருதை வென்றெடுத்தார்.

லோன் ஸ்டார் கொன்பெரன்ஸ் உள்ளக சுவட்டு மற்றும் கள சம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்றிருந்த உஷான் திவங்க,2.27 மீற்றர் உயரம் பாய்ந்து உள்ளக உயரம் பாய்தலுக்கான தேசிய சாதனையை படைத்திருந்தார் .

இந்தப் போட்டியில் சிறந்த ஆற்றல்களை வெளிப்படுத்திய உஷான் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றிருந்தமை கவனத்திற்கொள்ளப்பட்டு அவருக்கு சிறந்த கள மெய்வல்லுநருக்குரிய விருது வழங்கப்பட்ட்து .

ஐக்கிய அமெரிக்காவின் டெக்ஸாஸ் ஏ&எம் டெக்சாஸ் Texas A&M University பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று வரும் இவர் , இந்த பல்கலைக்கழகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டிகளில் பங்கேற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply