யாழ். கட்டுவனில் ஹெரோயினுடன் பெண் கைது!

யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டுவன் மேற்கு பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர் 240 மில்லிக்கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

தெல்லிப்பழை பொலிஸ் புலனாய்வு பிரிவினர் மற்றும் தெல்லிப்பழை பொலிஸார் இணைந்து இக் கைது நடவடிக்கையினை மேற்கொண்டனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply