வடமராட்சியில் விபத்து: ஆறு பேர் படுகாயம்!

வடமராட்சி – மந்திகைக்கும் மாலி சந்திக்கும் அண்மித்த பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்துக்களில் அறுவர் படுகாயமடைந்துள்ளனர்.

பருத்தித்துறை நோக்கி சென்றுகொண்டிருந்த முச்சக்கர வண்டியும், நெல்லியடி நோக்கி சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டதில் ஐவர் காயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் தனது இரண்டு பிள்ளைகளையும் பாடசாலையிலிருந்து ஏற்றிவந்த போதே முச்சக்கரவண்டியுடன் மோதுண்டு விபத்து இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பான விசாரணைகளை நெல்லியடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, கொடிகாம் பருத்தித்துறை வீதியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் படுகாயமடைந்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply