
நீதிபதிகள், நீதிவான்களுக்கு நீதிச் சேவை ஆணைக்குழுவினால் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
நீதிச் சேவை அலுவலர்களுக்கான வருடாந்திர இடமாற்றத்தின் கீழ் இந்த மாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த இடமாற்றம் எதிர்வரும் ஏப்ரல் 4ஆம் திகதி நடைமுறைக்கு வரும் வகையில் வழங்கப்பட்டுள்ளது.
அவர்களில் வடக்கு – கிழக்கில் தமிழ்பேசும் நீதிபதிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
மல்லாகம் மாவட்ட நீதிபதி ஏ.ஜி.அலெக்ஸ்ராஜா, பருத்தித்துறை மாவட்ட நீதிபதியாக மாற்றப்படுகிறார்.
பருத்தித்துறை மாவட்ட நீதிபதி திருமதி காயத்திரி சைலவன், மல்லாகம் நீதிமன்ற நீதிவானாக மாற்றப்படுகிறார்.
மல்லாகம் நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா, யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவானாக மாற்றப்படுகிறார்.
யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல், மட்டக்களப்பு நீதிவானாக மாற்றப்படுகிறார்.
மன்னார் மாவட்ட நீதிபதி பெ.சிவகுமார், மல்லாகம் மாவட்ட நீதிபதியாக மாற்றப்படுகிறார்.
நீதிச் சேவை பயிற்சி அலுவலகர் ஹிபத்துல்லா சமட், மன்னார் மாவட்ட நீதிபதியாக முதல் நியமனத்தைப் பெறவுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட நீதிபதி ரி.கருணாகரன், வாழைச்சேனை மாவட்ட நீதிபதியாக மாற்றப்படுகிறார்.
வாழைச்சேனை மாவட்ட நீதிபதி எச்.எம்.எம். பாஷில், மட்டக்களப்பு மாவட்ட நீதிபதியாக மாற்றப்படுகிறார்.
மட்டக்களப்பு மேலதி நீதிவான் ஜீவராணி கருப்பையா பண்டாரவளை நீதிவானாக மாற்றப்படுகிறார்.
நீதிச் சேவை பயிற்சி அலுவலகர் ஜே.பி.ஏ.ரஞ்சித்குமார், களுவாஞ்சிகுடி நீதிவானாக முதல் நியமனம் பெறுகிறார்.
மட்டக்களப்பு நீதிவான் ஏ.சி.ரிஷ்வான், பொத்துவில் மாவட்ட நீதிபதியாக மாற்றப்படுகிறார்.
நீதிச் சேவை பயிற்சி அலுவலகர் பி.ஆர்.ஐ. ஜமில், கிளிநொச்சி மேலதிக மாவட்ட நீதிபதியாக முதல் நியமனம் பெறுகிறார்.





