இலங்கையில் விமான டிக்கட் விலைகள் 27 வீதத்தினால் அதிகரிப்பு
இலங்கையில் விநியோகிக்கப்படும் விமான டிக்கெட்களின் (பயணச்சீட்டுகளின்) விலைகளை 27% இனால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகார சபை (CAASL) அறிவித்துள்ளது.
இன்று (11) முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த விலை அதிகரிப்பு அமுல்படுத்தப்படுவதாக அதிகாரசபையின் தலைவர் உபுல் தர்மதாச தெரிவித்தார்.
நாணயமாற்று விகிதங்களின் அடிப்படையில், டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்ததை அடுத்து இவ்வாறு அதன் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாணயமாற்று விகிதங்களின் அடிப்படையில், அமெரிக்க டொலர் ஒன்றின் பெறுமதி ரூ. 203.66 இலிருந்து ரூ. 259.99 ஆக இவ்வாரம் திடீரென அதிகரித்திருந்தது.





