அனோஜன் விவகாரம் இந்திய தூதுவர் மற்றும் அமெரிக்க தூதுவரை சந்தித்த தமிழரசுக் கட்சி எம். பிக்கள்

சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கும் அனோஜனின் உயிரைக் காப்பாற்ற அவசர நடவடிக்கை – இந்திய உயர்ஸ்தானிகர் மற்றும் அமெரிக்கத் தூதரக அதிகாரியுடன் சந்திப்பு!

சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள அனோஜன் அவர்களின் உயிரைக் காப்பாற்றுவதற்கான முயற்சிகளை முன்னெடுக்கும் வகையில், இன்று (23.09.2026) இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா (Santosh Jha) மற்றும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகத்தின் அரசியல் மற்றும் பொருளாதார ஆலோசகர் Anthony V. Pirnot ஆகியோரை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களள் சந்தித்துக் கலந்துரையாடினர்

அனோஜனின் விடுதலைக்காக மேற்கொள்ள வேண்டிய இராஜதந்திர நடவடிக்கைகள் மற்றும் அடுத்தகட்ட முயற்சிகள் தொடர்பாக விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

அனோஜனின் உயிரைக் காப்பாற்றுவதற்கான அவசரத் தேவையை முன்னிறுத்தி, சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் ஒருங்கிணைந்து உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினர்

அனோஜனின் உயிரைக் காப்பாற்றவும், அவரின் விடுதலைக்கான சாத்தியமான அனைத்து முயற்சிகளையும் முன்னெடுக்கவும் எமது நடவடிக்கைகள் தொடர்கின்றன.

அனோஜனின் உயிரைக் காப்பாற்ற அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியமாகும் என நாடாளுமன்ற குழுக்களின் தலைவர் தெரிவித்தார்

Leave a Reply