யாழ்ப்பாணம், கோப்பாய் பிரதேச செயலகத்திற்கு முன்பாக இன்று (02.11.2026) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் முச்சக்கரவண்டி ஒன்று பலத்த சேதமடைந்துள்ளது.
நீர்வேலி நோக்கிச் சென்றுகொண்டிருந்த முச்சக்கரவண்டி, கோப்பாய் பிரதேச செயலகத்திற்கு முன்பாகத் திரும்ப முற்பட்டபோது, பின்னால் வேகமாக வந்த பட்டா ரக வாகனம் முச்சக்கரவண்டியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது முச்சக்கரவண்டியின் சாரதி எவ்வித காயங்களுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.
எனினும், மோதலின் காரணமாக முச்சக்கரவண்டி பலத்த சேதமடைந்துள்ளது.
குறித்த விபத்து குறித்து கோப்பாய் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.




