ஹட்டன் – டிக்கோயா நகர சபையின் விசேட அமர்வு நேற்று (03) நடைபெற்றது.
இதன்போது, நகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நிலவும் மக்கள் பிரச்சினைகள் மற்றும் எதிர்கால அபிவிருத்திப் பணிகள் தொடர்பில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கிடையில் தீவிர கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதற்கமைய, 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு அமைவாக, தத்தமது வட்டாரங்களுக்கான அபிவிருத்தித் திட்ட யோசனைகளை இம்மாதம் 06ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு நகர சபைத் தவிசாளர் உறுப்பினர்களிடம் கோரிக்கை விடுத்தார்.
இதற்கிடையில், கட்சி மாறிய கலாநிதி அழகமுத்து நந்தகுமார் சபைக்கு வருகை தந்த நிலையில், அவருக்கு வரவேற்பும் கௌரவிப்பும் வழங்கப்பட்டது.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நகர சபை உறுப்பினர் பிரபாகரன், அவருக்குப் பொன்னாடை போர்த்திக் கௌரவித்ததுடன், நகர பிதா உள்ளிட்ட உறுப்பினர்களும் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
மேலும், புதிய கட்சியுடன் இணைந்து நகர சபையின் எதிர்கால அபிவிருத்திப் பணிகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறும் அவரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.





