மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் (DMT) நாரஹேன்பிட்ட தலைமையகத்தில் வழங்கப்படும் அனைத்து பொதுச் சேவைகளும் எதிர்வரும் நவம்பர் 23ஆம் திகதி முதல் முன்பதிவு அடிப்படையில் மாத்திரம் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நாரஹேன்பிட்ட தலைமையகத்தில் சேவைகளைப் பெற்றுக்கொள்ள விரும்பும் பொதுமக்கள், முன்கூட்டியே திகதி மற்றும் நேரத்தை ஒதுக்கி முன்பதிவு செய்துகொள்ள வேண்டும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
பொதுமக்களின் தேவைகளை கருத்திற்கொண்டு, நாளாந்த முன்பதிவு எண்ணிக்கை இருமடங்கிற்கும் அதிகமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் அதிகளவான மக்களுக்கு சேவைகளை வழங்குவதுடன், சேவை வழங்கும் நடைமுறைகளை விரைவுபடுத்தி காத்திருப்பு நேரத்தைக் குறைக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்பதிவுகளை 011 2 117 116 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாகவோ அல்லது திணைக்களத்தின் இணையவழி முன்பதிவு தளத்தின் ஊடாகவோ மேற்கொள்ள முடியும்.
முன்பதிவு இணையதளம்: https://dmtappointments.dmt.gov.lk
இந்த புதிய நடைமுறை அமுலுக்கு வரும் நவம்பர் 23ஆம் திகதி முதல், நாரஹேன்பிட்ட தலைமையகத்திற்கு அதிகாலையில் சென்று தேவையற்ற வரிசைகளில் காத்திருப்பதைத் தவிர்க்குமாறு பொதுமக்களிடம் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.



