கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் கீழ் கிளிநொச்சியில் இயங்கிவரும் இலங்கை ஜேர்மன் பயிற்சிக் நிறுவனத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான 480 புதிய மாணவர்களை இலங்கையின் பலபாகங்களிருந்தும் குறித்த ஜேர்மன் பயிற்சிக் நிறுவனத்துக்கு இணைத்துக்கொள்ளும் நிகழ்வு இன்று (18.11.2026) காலை 9.30 மணிக்கு கிளிநொச்சி அறிவியற் நகரில் அமைந்துள்ள ஜேர்மன் பயிற்சிக் நிறுவனத்தின் வளாகத்தில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இலங்கை ஜேர்மன் பயிற்சிக் நிறுவனத்தின் கிளை அதிபர் மற்றும் பணியாளர்கள் இணைந்து நடத்தும் இந்நிகழ்விற்கு, மொரட்டுவை சிலோன் ஜெர்மன் தொழிற்கல்வி நிறுவனத்தின் இயக்குநர்/அதிபர் மேஜர் ஜெனரல் ஓய்வுபெற்ற பொறியியலாளர் சாந்த ரணவீர அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
மேலும், கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் அஜித்தா பிரதீபன் அவர்கள் கௌரவ விருந்தினராகக் கலந்துகொண்டு புதிதாகத் தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களை வரவேற்கும் விதமாகவும், அவர்களின் எதிர்காலத் தொழிற்கல்விப் பயணத்தைத் தொடங்கி வைக்கும் வகையிலும் இந்த விசேட நிகழ்வு இடம்பெற்றது.
குறித்த நிகல்வில் புதிய மாணவர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என பலர் கலந்துகொண்டார்கள்.



