யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் கொன்சியூலர் ஜெனரலாகப் பணியாற்றி, தனது பதவிக்காலத்தை நிறைவு செய்து புதுடில்லி செல்லும் சாய் முரளிக்கும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும் இடையில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை விசேட சந்திப்பு நடைபெற்றது.
இதன்போது, தமது கடந்தகாலப் பணிக்கால அனுபவங்களையும் நினைவுகளையும் இருவரும் பரஸ்பரம் பகிர்ந்துகொண்டனர்.
யாழ்ப்பாணத்திலிருந்து விடைபெற்றுச் செல்லும் சாய் முரளியின் எதிர்காலப் பயணம் சிறப்பாக அமையவும், மேலும் பல புதிய பொறுப்புகளில் சாதனைகளைப் படைக்கவும் நாடாளுமன்ற உறுப்பினர் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினரின் இல்லத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், இந்தியத் துணைத் தூதரகத்தின் அலுவலர் நாகராஜன் ராமசுவாமியுடன் நாடாளுமன்ற உறுப்பினரின் ஆதரவாளர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்




