சரசாலையில் வீடு கையளிப்பு!

யாழ்ப்பாணம் தென்மராட்சி சரசாலை தெற்கில் அமைக்கப்பட்ட வீடொன்றை மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் பயனாளியிடம் இன்று(25) கையளித்தார்.

வீடற்றவர்களுக்காக அரசாங்கத்தால் வழங்கப்பட்ட 20 இலட்சம் ரூபா நிதியில், இந்த வீடு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில், அமைச்சருடன் நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன்,யாழ்ப்பாண மாவட்ட அரச அதிபர் மருதலிங்கம் பிரதீபன்,யாழ்ப்பாண மாநகரசபை உறுப்பினர் சுந்தரமூர்த்தி கபிலன்,தென்மராட்சி பிரதேச செயலர் பிரான்சிஸ் சந்திர சத்தியசோதி, தேசிய மக்கள் சக்தியின் தென்மராட்சி அமைப்பாளர் காராளசிங்கம் பிரகாஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply