யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் கொன்சியூலர் ஜெனரலாகப் பணியாற்றி, தனது பதவிக்காலத்தை நிறைவு செய்யும் சாய் முரளிக்கும், வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகனுக்கும் இடையில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை விசேட சந்திப்பு நடைபெற்றது.
இந்தச் சந்திப்பின்போது, தமது கடந்தகாலப் பணிக்கால அனுபவங்களையும், வடக்கு மாகாணத்துடன் தொடர்புடைய நினைவுகளையும் இருவரும் பரஸ்பரம் பகிர்ந்துகொண்டனர்.
யாழ்ப்பாணத்திலிருந்து விடைபெற்றுச் செல்லும் சாய் முரளியின் எதிர்காலப் பயணம் சிறப்பாக அமையவும், அவர் புதிய பொறுப்புகளில் மேலும் பல சாதனைகளைப் படைக்கவும் வடக்கு மாகாண ஆளுநர் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் சிவபாதசுந்தரம் சத்தியசீலன் மற்றும் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் துணைத் தூதுவர் நாகராஜன் ராமசுவாமி ஆகியோரும் கலந்துகொண்டனர்.




