பிரித் நிகழ்வில் மகிழ்ச்சியாக பட்டாசு கொளுத்திய மாணவனுக்கு நடந்த சோகம் பிரித் நிகழ்வில் மகிழ்ச்சியாக பட்டாசு கொளுத்திய மாணவனுக்கு நடந்த சோகம்

அம்பாந்தோட்டை – வீரகெட்டிய பகுதியில் உறவினர் வீட்டில் நடைபெற்ற பிரித் நிகழ்வின்போது பட்டாசு கொளுத்தச் சென்ற 19 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வீரகெட்டிய, கெப்பிட்டியாவ பகுதியைச் சேர்ந்த இரோஷ் தினுஜய ஜயசேகர என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் வீரகெட்டிய தேசிய பாடசாலையில் கல்வி கற்று வந்த மாணவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 22ஆம் திகதி இரவு இடம்பெற்ற இந்த விபத்தில் காயமடைந்த அவர், காலி தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

விசாரணைகளின்போது தெரியவந்த தகவல்களின்படி, உறவினர் வீட்டில் நடைபெற்ற பிரித் நிகழ்வுக்காக இரோஷ் தனது சொந்த விருப்பத்தின் பேரில் பணம் செலுத்தி பட்டாசுகளை வாங்கியுள்ளார்.

பின்னர், நிகழ்வு நடைபெறவிருந்த வீட்டின் முன்பாக சுமார் இரண்டு அடி இடைவெளியில் குழிகளைத் தோண்டி பட்டாசுகளைப் பொருத்தியுள்ளார்.

பிரித் நிகழ்வு ஆரம்பமானதும் பட்டாசுகளைக் கொளுத்தியுள்ளார். ஏனைய பட்டாசுகள் வெடித்த நிலையில், ஐந்தாவது பட்டாசு வெடிக்காததால் அதன் திரியைப் பரிசோதிப்பதற்காக அருகில் சென்றுள்ளார்.

இதன்போது, குறித்த பட்டாசு திடீரென வெடித்து அவரது முகத்தில் தாக்கியதில் அவர் கீழே விழுந்ததாக உயிரிழந்தவரின் நண்பர் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

Leave a Reply