தங்க நகைகள் கொள்ளையிட வந்த குழுவினரால் இருவர் கொலை

சீதுவ, மார்ச் 17

சீதுவ மற்றும் மாலபே ஆகிய பிரதேசங்களில் தங்கநகைகளை கொள்ளையிட வந்த குழுவினரால் இருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சீதுவ – முகலன்கமுவ பகுதியில் வீடொன்றிலிருந்த 73 வயதாக பெண்ணொருவர் நேற்று(16) கொலை செய்யப்பட்டுள்ளதுடன், உடைமைகள் மற்றும் தங்க நகைகள் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, மாலபே – தலஹேன பகுதியில் வீடொன்றுக்குள் நுழைந்த குழுவினர் மனைவியை கட்டிவைத்துவிட்டு கணவரை கொலை செய்துள்ளதுடன், தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளது.

இதன்போது 80 வயது முதியவர் ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply