ஐஸ்வர்யாவின் பாடலை வெளியிட்ட ரஜினி!

<!–

ஐஸ்வர்யாவின் பாடலை வெளியிட்ட ரஜினி! – Athavan News

திரைப்பட இயக்குனரும், பின்னணி பாடகருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது முசாபிர் என்ற இசை ஆல்பம் ஒன்றை இயக்கியுள்ளார்.

இந்த இசை ஆல்பம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாகியுள்ளது. தமிழில் அனிருத் பாடியுள்ள இந்த ஆல்பத்திற்கு பயணி எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இந்த  இசை ஆல்பத்தை நடிகர் ரஜினிகாத்  வெளியிட்டுள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், ”என் மகள் ஒன்பது ஆண்டுகளுக்கு பின் இயக்கியுள்ள பயணி ஆல்பத்தை வெளியிடுவதில் மகிழ்ச்சி. அவர் எப்போதும் சிறப்பாக இருக்க விரும்புகிறேன். கடவுள் ஆசிர்வதிப்பார். ஐ லவ் யூ’ எனத் தெரிவித்துள்ளார்.


Leave a Reply